Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ உங்கள் ஊராட்சி பகுதிக்காக........ நெரிசலால் அவதி; கழிவு நீரால் தொற்று; மன்னவனுார் ஊராட்சியில் தொடரும் அவலம்

உங்கள் ஊராட்சி பகுதிக்காக........ நெரிசலால் அவதி; கழிவு நீரால் தொற்று; மன்னவனுார் ஊராட்சியில் தொடரும் அவலம்

உங்கள் ஊராட்சி பகுதிக்காக........ நெரிசலால் அவதி; கழிவு நீரால் தொற்று; மன்னவனுார் ஊராட்சியில் தொடரும் அவலம்

உங்கள் ஊராட்சி பகுதிக்காக........ நெரிசலால் அவதி; கழிவு நீரால் தொற்று; மன்னவனுார் ஊராட்சியில் தொடரும் அவலம்

ADDED : செப் 02, 2025 03:54 AM


Google News
Latest Tamil News
கொடைக்கானல் : நெரிசலால் அவதி, கழிவு நீரால் தொற்று என பல்வேறு பிரச்னைகளுடன் மன்னவனுார் ஊராட்சி மக்கள் பரிதவிக்கின்றனர்.

மன்னவனுார், கவுஞ்சி , கீழானவயல், மஞ்சம்பட்டி, மூங்கில் பள்ளம் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் சரிவர அள்ளப்படாத குப்பை, சுத்திகரிக்கப்படாத குடிநீர் சப்ளையால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. வார நாட்களில் சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து இடையூறும் ஏற்படுகிறது . ரோட்டோர ஆக்கிரமிப்பு கடைகளால் ஊராட்சி மக்கள் பாதிக்கின்றனர், காட்டுமாடு, பன்றிகள் நடமாட்டத்தால் மக்கள் ரோடுகளில் ஒரு வித அச்சத்துடன் பயணிக்கின்றனர். சாக்கடை வசதியின்றி ரோட்டில் செல்லும் கழிவு நீரால் மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர். சேதமடைந்த ரோடுகளால் அவதி என ஏராளமான பிரச்னைகளுடன் மன்னவனுார் ஊராட்சி மக்கள் உள்ளனர்.

...............

குரங்குகளால் அவதி

மணிகண்டன், விவசாயி: ஊராட்சியில் சப்ளை செய்யப்படும் குடிநீர் மஞ்சள் நிறமாக துாசு கலந்து வருவதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்கு சந்தனபாறை, பரப்பலாறு ஆகிய இரு குடிநீர் ஆதாரங்கள் இருந்தும் முறையான பைப் லைன் வசதியின்றி தண்ணீர் வீணாகிறது. சரிவர குப்பை அள்ளபடாததால் சுகாதாரக்கேடாக உள்ளது. சாக்கடை வசதியின்றி கழிவுநீர் ரோட்டில் செல்லும் அவலம் உள்ளது.நகரில் சுற்றி திரியும் குரங்குகளால் குடியிருப்புவாசிகள் அவதிப்படும் நிலை உள்ளது. ஊராட்சி பராமரிப்பில் உள்ள குளங்கள் , நீரோடைகள் சீரமைக்கப்படாமல் பாதிக்கிறோம். நுாறு நாள் வேலை முறையாக வழங்காமல் முறைகேடுகள் நடந்துள்ளன.

...........

வராத பஸ்களால் சிரமம்

காமராஜ், விவசாயி: விவசாய தோட்டங்களில் காட்டுமாடு, பன்றி தொல்லைகளால் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கிறோம்.வார நாட்கள் , சீசன் தருணங்களில் ரோட்டோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மன்னவனுார் கை காட்டிக்குள் வரும் பஸ்கள் கிராமத்திற்குள் நுழையாமல் செல்கிறது.தெருவில் ரோடுகள் சேதமடைந்து குண்டு,குழியுமாக உள்ளது. கும்பூர் கீழானவயல் ரோடு வசதியிருந்தும் பஸ் வசதி இல்லாத நிலை உள்ளது.மஞ்சம்பட்டி மூங்கில் பள்ளம் இடையே ரோடு வசதியை ஏற்படுத்த தர வேண்டும். கழிப்பறை வசதியின்றி இருபாலரும் ரோட்டோரத்தை நாடும் நிலை உள்ளது. அரசு பள்ளிகளில் இயற்கை உபாதைக்கு கூட தண்ணீரில்லாத நிலை உள்ளது.

......

ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில் ''உள்ளாட்சி அமைப்புகள் தற்போது இல்லாத நிலையில் ஊராட்சியில் உள்ள குறைபாடுகள் குறித்து பொதுமக்களிடம் குறைகேட்டு சீர் செய்யப்படும் ''என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us