/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ லெக்கையன்கோட்டை பைபாஸ் ரோடு துவங்கும் இடத்தில் அடிக்கடி விபத்து லெக்கையன்கோட்டை பைபாஸ் ரோடு துவங்கும் இடத்தில் அடிக்கடி விபத்து
லெக்கையன்கோட்டை பைபாஸ் ரோடு துவங்கும் இடத்தில் அடிக்கடி விபத்து
லெக்கையன்கோட்டை பைபாஸ் ரோடு துவங்கும் இடத்தில் அடிக்கடி விபத்து
லெக்கையன்கோட்டை பைபாஸ் ரோடு துவங்கும் இடத்தில் அடிக்கடி விபத்து
ADDED : செப் 02, 2025 03:52 AM

ஒட்டன்சத்திரம் : லெக்கையனகோட்டை பைபாஸ் ரோடு தொடங்கும் இடத்தில் உள்ள எச்சரிக்கை பலகை இரவு நேரத்தில் இருளில் மூழ்குவதால் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.
ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் ரோட்டில் லெக்கையன் கோட்டையில் பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் லெக்கையன்கோட்டையில் பைபாஸ் ரோடு தொடங்கும் இடம், திண்டுக்கல் ரோட்டில் இணையும் பகுதியில் ஒருவழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த இடத்தில் 'டேக் டைவர்ஷன்' போர்டும் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பின்னால் சிமென்ட் சிலாப்கள் உள்ளன.
பொள்ளாச்சி, தாராபுரம் பகுதிகளிலிருந்து இந்த ரோட்டில் வரும் வாகனங்கள் திண்டுக்கல் ரோட்டை அடைகின்றன. பகலில் 'டேக் டைவர்ஷன்' போர்டு வாகன ஓட்டிகளுக்கு நன்றாக தெரிகிறது. இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் தெரிவதில்லை. இதனால் வேகமாக வரும் வாகனங்களுக்கு எந்த இடத்தில் ஒரு வழிச்சாலை தொடங்குகிறது என சரிவர தெரியாமல் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
இப்பகுதியில் உள்ள ஹைமாஸ் விளக்கு பழுதடைந்து பல நாட்கள் ஆகிவிட்டது. இதனை சரி செய்தால் கூட எச்சரிக்கை பலகை இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரிய வரும். இந்த இடத்தில் இரவிலும் தெரியும் வகையில் எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும்.