/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ விலை சரிவில் பூக்கள்; ரூ.1500 க்கு விற்ற மல்லி ரூ.300 க்கு விற்பனை விலை சரிவில் பூக்கள்; ரூ.1500 க்கு விற்ற மல்லி ரூ.300 க்கு விற்பனை
விலை சரிவில் பூக்கள்; ரூ.1500 க்கு விற்ற மல்லி ரூ.300 க்கு விற்பனை
விலை சரிவில் பூக்கள்; ரூ.1500 க்கு விற்ற மல்லி ரூ.300 க்கு விற்பனை
விலை சரிவில் பூக்கள்; ரூ.1500 க்கு விற்ற மல்லி ரூ.300 க்கு விற்பனை
ADDED : ஜூன் 14, 2025 12:15 AM
திண்டுக்கல்: கோயில் திருவிழாக்கள், விேஷச தினங்கள் இல்லாததால் பூக்களின் விலை வெகுவாக சரிந்து விற்பனையாது. ரூ.1500க்கு விற்ற மல்லி ரூ.300 ஆக குறைந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நல்ல விலைக்கு விற்பனையான பூக்களின் விலை நேற்று சரிவை சந்தித்தது. தொடர் முகூர்த்த தினங்களையொட்டி ரூ. 1500 க்கு விற்ற மல்லிகை நேற்று ரூ.300 , ரூ.500 க்கு விற்ற முல்லை ரூ.150 க்கு விற்பனையானது.
இதேபோல் ஜாதிப்பூ ரூ.300, கனகாம்பரம் ரூ.200, அரளி ரூ.50, செண்டுமல்லி ரூ.30 என விற்பனையானது. தற்போது விஷேச தினங்களோ, கோயில் திருவிழாக்களோ இல்லை. அதனால் பூக்கள் விலை 3 முதல் 5 மடங்கு கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் பூக்களின் வரத்தும் அதிகமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.