/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ குறைந்த கட்டணம், மானியம், வங்கிக் கடன் அரசு கேபிளில் இணையும் ஆப்பரேட்டர்கள் சொல்கிறார் வாரிய தலைவர் ஜீவா குறைந்த கட்டணம், மானியம், வங்கிக் கடன் அரசு கேபிளில் இணையும் ஆப்பரேட்டர்கள் சொல்கிறார் வாரிய தலைவர் ஜீவா
குறைந்த கட்டணம், மானியம், வங்கிக் கடன் அரசு கேபிளில் இணையும் ஆப்பரேட்டர்கள் சொல்கிறார் வாரிய தலைவர் ஜீவா
குறைந்த கட்டணம், மானியம், வங்கிக் கடன் அரசு கேபிளில் இணையும் ஆப்பரேட்டர்கள் சொல்கிறார் வாரிய தலைவர் ஜீவா
குறைந்த கட்டணம், மானியம், வங்கிக் கடன் அரசு கேபிளில் இணையும் ஆப்பரேட்டர்கள் சொல்கிறார் வாரிய தலைவர் ஜீவா
ADDED : ஜூன் 14, 2025 12:15 AM
திண்டுக்கல்: ''குறைந்த கட்டணம், மானிய விலையில் எச்.டி., செட்டாப் பாக்ஸ், வங்கி கடன் போன்றவற்றால் பல தனியார் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இணைய துவங்கியுள்ளனர்,'' என, திண்டுக்கல்லில் தமிழக அரசு கேபிள் டிவி வாரிய தலைவர் ஜீவா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது : கேபிள் டிவி ஆப்பரேட்டர்களின் 8 ஆண்டு கால கோரிக்கையான எச்.டி., உயர் வரையறை செட்டாப் பாக்ஸ் வழங்கப்படுவதையும், தடையில்லா சிக்னல், தனியார் நிறுவனத்திற்கு நிகராக உள்ளூர் சேனல்கள் வழங்கி வருவதையும் மாவட்ட வாரியாக ஆய்வு செய்து வருகிறோம்.
அரசு கேபிள் டிவியில் இருந்து வெளியேறி தனியார் நிறுவனத்திற்கு சென்ற ஆப்பரேட்டர்கள் தற்போது சேவை, குறைந்த கட்டணத்தால் ஆர்வத்துடன் அரசு கேபிளில் இணைகின்றனர்.
கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு ரூ.2 லட்சம் வரை வங்கிக் கடன் வழங்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு தேவைக்கேற்ப உள்ளூர் சேனல்களும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
அரசு கேபிள் டிவி விநியோகஸ்தர்களையும், ஆப்பரேட்டர்களையும் பங்குதாரர்களாக்க மேலாண்மை இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம் என்றார்.