/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அரசு பஸ்களில் முதலுதவி பெட்டி ஓகே; மருந்துகள் இல்லையே அரசு பஸ்களில் முதலுதவி பெட்டி ஓகே; மருந்துகள் இல்லையே
அரசு பஸ்களில் முதலுதவி பெட்டி ஓகே; மருந்துகள் இல்லையே
அரசு பஸ்களில் முதலுதவி பெட்டி ஓகே; மருந்துகள் இல்லையே
அரசு பஸ்களில் முதலுதவி பெட்டி ஓகே; மருந்துகள் இல்லையே
ADDED : மே 11, 2025 05:03 AM
திண்டுக்கல் : கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களில் முதலுதவி பெட்டகத்தில் மருந்துகள் இருப்பதையும், அதன் காலாவதி தேதி குறித்து ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
அரசு போக்குவரத்து கழகத்தினரால் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இடையே டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. பஸ்களில் விபத்து நேரத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக முதலுதவி பெட்டகங்கள் வைக்கப்பட்டது. ஆனால் தற்போது பெரும்பாலான டவுன் பஸ்களில் முதலுதவி பெட்டகங்கள் பெயர் அளவிற்கு மட்டுமே உள்ளது. இவற்றில் உள்ள மருந்துகளின் காலாவதி தேதி குறித்து போதிய ஆய்வுகள் செய்யப்படுவதில்லை.
பஸ்களை ஆண்டுக்கு ஒரு முறை வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு கொண்டு செல்லும் போது மட்டும் பெட்டகங்கள் புதுப்பிக்கப்படுகிறது. இதன் பயன்பாடு தேவையான போது பயன்படுத்த முடியாத நிலை தொடர்வதால் பயணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கிராமங்களுக்கான அரசுடவுன் பஸ்களில் முதலுதவி பெட்டகங்கள் இருப்பதையும், அதில் மருந்துகள் கையிருப்பு, காலாவதி தேதி குறித்து ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.