ADDED : செப் 02, 2025 05:59 AM
திண்டுக்கல் : சீலப்பாடி ஏ.டி.காலனி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோகுல் 18.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீட்டுருகே உள்ள காளியம்மன் கோயில் முன்பாக நண்பர்களுடன் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தினார். மைக்செட் அமைத்து சினிமா பாடலுக்கு நடனமாடியுள்ளார். அவ்வழியே வந்த ஆனந்தகுமார் 19, கார்த்திக் 24, அறிவானந்தன் 23, ராஜா 24, 17 வயது சிறுவன் கோயில் முன்பாக ஆடக்கூடாது, மைக்செட்டை நிறுத்த கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஆத்திரமடைந்த ஆனந்தகுமார், கார்த்திக் நண்பர்களுடன் இரும்புக்கம்பியால் கோகுலை தாக்கினர். தாலுகா போலீசார் ஆனந்தகுமார், கார்த்திக்கை கைது செய்தனர்.