/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தெரு நாய்களை கட்டுப்படுத்த முறையீடு தெரு நாய்களை கட்டுப்படுத்த முறையீடு
தெரு நாய்களை கட்டுப்படுத்த முறையீடு
தெரு நாய்களை கட்டுப்படுத்த முறையீடு
தெரு நாய்களை கட்டுப்படுத்த முறையீடு
ADDED : செப் 10, 2025 08:13 AM
பழநி; பழநி நகராட்சியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் குழந்தையை தெரு நாய்கள் கடித்ததால் ஆத்திரமுற்ற அப்பகுதி மக்கள் ஊர்வலமாக நகராட்சி அலுவலகம் சென்று மனு அளிக்க முயன்றனர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் ஊர்வலமாக செல்வதை தவிர்த்து அ.தி.மு.க., கவுன்சிலர் ஜன்னத்துல் பிரதோஷ் தலைமையில் நகராட்சி கமிஷனர் டிட்டோவிடம் தெரு நாய்களை கட்டுப்படுத்த மனு அளித்தனர்.
அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராஜாமுகமது உடன் இருந்தார். இது போல் பா.ஜ., நகர தலைவர் ஆனந்த் குமார் தலைமையில் பா.ஜ., நகர நிர்வாகிகளும் நகராட்சி கமிஷனர் டிட்டோவிடம் நாய் தொல்லையை கட்டுப்படுத்த மனு அளித்தனர். இதேபோல் த.வெ.க., வினரும் மனு அளித்தனர்.