Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/விளைநிலைங்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை; நஷ்டம் ஏற்படுவதோடு, அச்சத்தோடு வாழ்வதாக விவசாயிகள் வேதனை

விளைநிலைங்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை; நஷ்டம் ஏற்படுவதோடு, அச்சத்தோடு வாழ்வதாக விவசாயிகள் வேதனை

விளைநிலைங்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை; நஷ்டம் ஏற்படுவதோடு, அச்சத்தோடு வாழ்வதாக விவசாயிகள் வேதனை

விளைநிலைங்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை; நஷ்டம் ஏற்படுவதோடு, அச்சத்தோடு வாழ்வதாக விவசாயிகள் வேதனை

ADDED : ஜூன் 17, 2025 07:30 AM


Google News
Latest Tamil News
பழநி : திண்டுக்கல் மாவட்டத்தில் வனவிலங்குகள் விளை நிலங்களில் புகுந்து விவசாய பொருட்களை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதால், அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகள் அருகே விவசாய நிலங்கள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் உள்ளது. இப்பகுதிகளில் தென்னை, மா, கொய்யா, கரும்பு, மக்காச்சோளம், நெல்,வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை விவசாயிகள் விளைவித்து வருகின்றனர். வனப் பகுதியில் போதுமான தண்ணீர், உணவு கிடைக்காத நிலையில் கன்னிவாடியில் இருந்து ராமபட்டினம்புதூர், கணக்கன்பட்டி, பழைய ஆயக்குடி பகுதி வரை வனவிலங்குகள் அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து விவசாய பொருட்களை சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைவது மட்டுமில்லாமல் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே, விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குகள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக தொங்கு சோலார் அமைப்பு,அகழிகள் போன்றவை அமைக்க வலியுறுத்துகின்றனர்.

பழநி, தொப்பம்பட்டி, சாணார்பட்டி,நத்தம், ரெட்டியார்சத்திரம், ஆத்தூர், தாளையம், மானூர், நரிக்கல்பட்டி, பழநி, தாராபுரம் சாலையில் நமது மாவட்ட எல்லை வரை காட்டுப்பன்றி தொல்லை உள்ளது. இவற்றை கட்டுப்படுத்தவும் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* தகுந்த நடவடிக்கை தேவை

யானை, காட்டுப்பன்றி, காட்டெருமை, குரங்கு, மான், மயில் போன்ற வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் மாவட்டம் முழுவதும் சேதத்தை ஏற்படுத்துகிறது. மலையோர விவசாய நிலங்களில் யானை தொல்லை அடிக்கடி உள்ளது. கொய்யா, மா, மக்காச்சோளம் தென்னை பயிர்களை சேதப்படுத்துவது மட்டுமில்லாமல் ஆயக்குடி பகுதியில் விவசாயிகளை தாக்கியுள்ளது. காட்டுப்பன்றி, மலை அடிவாரப் பகுதியில் மட்டுமில்லாமல் அதிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விவசாய நிலங்களிலும் சேதம் ஏற்படுத்துகிறது. குறிப்பாக பூண்டு, கரும்பு, மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்துகிறது. தமிழக அரசு காட்டுப் பன்றியை கட்டுப்படுத்த உத்தரவிட்டு உள்ளது. ஆனால் கேரள மாநிலத்தில் காட்டுப்பன்றிகளை கொல்ல அனுமதி உள்ளது. தமிழகத்தில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. கேரளாவில் காட்டுப்பன்றியை கொன்றால் ரூ.1500 வழங்குகின்றனர். தமிழகத்தில் அவ்வாறு உடனடியாக காட்டுப் பன்றியை தாக்க முடியாது. வனவிலங்குகளால் சேதமாகும் விளை பொருள்களுக்கும், தாக்கப்படும் மனிதர்களுக்கும் அதிக இழப்பீடுகளை வழங்க வேண்டும். யானைகளை தடுக்க சோலார் வேலிகள், அகழிகள் அமைக்கலாம். யானைகளுக்கு தேவையான உணவுகளை வனப்பகுதியில் கிடைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராமசாமி, மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு விவசாய சங்கம், கீரனூர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us