ADDED : ஜூன் 17, 2025 06:55 AM
இருவர் கைது
நத்தம்: வத்திபட்டி, கவரயபட்டி பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளில் போலீசார் சோதனை செய்தபோது விற்பனை செய்வதற்காக புகையிலைப் பொருட்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கபட்டது. கவரயப்பட்டி சேவுகபெருமாள், இடையபட்டி பொன்னையா 43 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மூவர் காயம்
வடமதுரை: திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெரு வல்லரசு 45, இவரது மனைவி ஜெயலட்சுமி 40 ஆகியோர் டூவீலரில் திருச்சி மாவட்டம் துலுக்கம்பட்டி கோயில் விழாவில் பங்கேற்ற பின் ஊர் திரும்பினர். நேற்று முன்தினம் இரவு வடமதுரை கொல்லப்பட்டி பிரிவு பகுதியில் சென்றபோது செங்கல்பட்டு பிள்ளையார் கோயில் தெரு சுப்பிரமணி 29 பழநிக்கு ஓட்டி வந்த டூவீலர் மோதியது. விபத்தில் 3 பேரும் படுகாயமடைந்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.