ADDED : ஜூலை 14, 2024 03:42 AM
திண்டுக்கல், : உணவு பாதுகாப்பு துறை சார்பில் ஓட்டல் உரிமையாளர்கள்,மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் தலைமை வகித்தார்.
பாதுகாப்பு அலுவலர்கள் சரவணக்குமார்,முருகன் முன்னிலை வகித்தனர். ஓட்டல்களில் சுகாதாரமாக உணவுகள் தயாரிப்பது,நுகர்வோரிடம் எப்படி நடந்து கொள்வது,பாதிப்பு ஏற்பட்டால் எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்பது குறித்தெல்லாம் விவாதிக்கப்பட்டது.