/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநியில் ரோப் காரில் செல்ல தாமதம் மாற்றுத்திறனாளி வீடியோ வைரல் பழநியில் ரோப் காரில் செல்ல தாமதம் மாற்றுத்திறனாளி வீடியோ வைரல்
பழநியில் ரோப் காரில் செல்ல தாமதம் மாற்றுத்திறனாளி வீடியோ வைரல்
பழநியில் ரோப் காரில் செல்ல தாமதம் மாற்றுத்திறனாளி வீடியோ வைரல்
பழநியில் ரோப் காரில் செல்ல தாமதம் மாற்றுத்திறனாளி வீடியோ வைரல்
ADDED : ஜூலை 14, 2024 02:04 AM
பழநி,:பழநி முருகன் கோயிலில் நேற்றிரவு தரிசனம் செய்ய வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரோப் காரில் முன்னுரிமை வழங்க தாமதம் ஏற்பட்டதாக வெளியான வீடியோ வைரலாக , சில நிமிடங்களில் கோயில் சார்பில் வெளியான வீடியோவில் அதே மாற்றுத்திறனாளி வேறு சிலரின் துாண்டுதலில் அவ்வாறு பேட்டியளித்ததாக கூறியது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது .
இக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நேற்றிரவு ரோப் கார் ஸ்டேஷனுக்கு வந்த மாற்றுத்திறனாளி நவீன் குமாருக்கு முன்னுரிமை வழங்க தாமதம் செய்வதாக வீடியோ வைரலானது. அதில் அவர் ''பார்வை மாற்றுத்திறனாளியான நானும் எனது தங்கையும் ரோப் கார் மையம் வந்துள்ளோம்.
இங்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கிறோம். கண்காணிப்பாளர் வரும் வரை காத்திருக்குமாறு பணியாளர்கள் கூறி அனுமதி மறுக்கிறார்கள் . இது கஷ்டமாக உள்ளது. எங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அனுமதிக்க வேண்டும் ''என குறிப்பிட்டிருந்தார்.
இதன் வீடியோ வைரலான சில நிமிடங்களில் கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட வீடியோவில் அதே நபர் கூறியிருப்பதாவது:
குடும்பத்துடன் தரிசனம் செய்ய கோயிலுக்கு வந்தோம் .நானும் என் தங்கையும் மாற்றுத்திறனாளிகள். ரோப் காரில் செல்ல கூட்டம் அதிகம் இருந்தது. கண்காணிப்பாளர் வரும் வரை காத்திருக்குமாறு கூறினார்கள். அப்போது சிலர் என்னை கட்டாயப்படுத்தி பேட்டி எடுத்தார்கள்.
தற்போது சுவாமி தரிசனம் நல்லபடியாக முடிந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு கோயில் சார்பில் எப்போதும் முன்னுரிமை அளித்து வருகின்றனர் 'என கூறி உள்ளார். இரு வீடியோ பதிவும் அடுத்தடுத்து வைரலாக குழப்பம் ஏற்பட்டது.