ADDED : ஜூலை 14, 2024 03:43 AM
ஒட்டன்சத்திரம் : காளாஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.தாளாளர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் முதலுதவி சிகிச்சை முறைகள் குறித்து செய்து காட்டினர். தலைமை ஆசிரியர் ரங்கசாமி, உதவி தலைமை ஆசிரியை செல்வராணி கலந்து கொண்டனர்.