ADDED : ஜூன் 30, 2024 05:15 AM
பட்டிவீரன்பட்டி : தாண்டிக்குடி ரோட்டில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சாவை பிரித்து டூ வீலர்களில் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்புவதாக பட்டிவீரன்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி சித்தரேவு நெல்லுார் ரோட்டில் டூவீலரில் நின்ற மூன்று பேரை சோதனை செய்ததில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது.
சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த ராஜசேகரன் 45, பாலமுருகன் 30, சதீஷ் 30 ,ஆகியோரை கைது செய்த போலீசார் 21 கிலோ கஞ்சா, டூவீலர்களை பறிமுதல் செய்தனர். ராஜசேகர் மீது ஆந்திரா, தமிழ்நாட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவின் கீழ் பல்வேறு வழக்குகள் உள்ளன.