/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கிரிக்கெட் லீக்; நல்லாம்பட்டி யங்ஸ்டார் அணி சாம்பியன் கிரிக்கெட் லீக்; நல்லாம்பட்டி யங்ஸ்டார் அணி சாம்பியன்
கிரிக்கெட் லீக்; நல்லாம்பட்டி யங்ஸ்டார் அணி சாம்பியன்
கிரிக்கெட் லீக்; நல்லாம்பட்டி யங்ஸ்டார் அணி சாம்பியன்
கிரிக்கெட் லீக்; நல்லாம்பட்டி யங்ஸ்டார் அணி சாம்பியன்
ADDED : ஜூன் 30, 2024 05:12 AM

திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய நான்காவது டிவிஷன் லீக் போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்று 35 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்து திண்டுக்கல் பாலாஜி பவன் கோப்பையை நல்லாம்பட்டி யங்ஸ்டார் கிரிக்கெட் கிளப் அணி வென்றது. 5 வெற்றிகளை பெற்று 21 புள்ளிகளுடன் நெட் ரன்ரேட் அடிப்படையில் திண்டுக்கல் சச்சின் சிசி அணி 2ம் இடத்தை பிடித்தது.
முதலில் பேட்டிங் செய்த நல்லாம்பட்டி யங்ஸ்டார் கிரிக்கெட் கிளப் அணி 25 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ஓவர்கள் எடுத்தது. மாதேஷ் 61 (நாட் அவுட்), முத்து 26 ரன்களும், கவுதம் பாபு 3 விக்கெட் எடுத்தார். சேசிங் செய்த கொடைக்கானல் யங்ஸ்டர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்து 121 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. மணிகண்டபிரபு 36, ரவிச்சந்திரன் 28, பிரசாந்த் 25 ரன்களும், மாதேஷ் 3 விக்கெட்டும் எடுத்தார்.
மற்றொரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொடைக்கானல் லெவன் அணி 17.3 ஓவர்களில் 72 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ரஞ்சித்குமார் 35 ரன்களும், கன்வால் கிேஷார் 5 விக்கெட்ம் எடுத்தார். சேசிங் செய்த திண்டுக்கல் மெஜஸ்டிக் கிரிக்கெட் கிளப் அணி 12.2 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழந்து 73 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.