/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கூரை இடிந்து விழுந்து மூதாட்டி காயம் கூரை இடிந்து விழுந்து மூதாட்டி காயம்
கூரை இடிந்து விழுந்து மூதாட்டி காயம்
கூரை இடிந்து விழுந்து மூதாட்டி காயம்
கூரை இடிந்து விழுந்து மூதாட்டி காயம்
ADDED : ஜூன் 06, 2024 04:19 AM

கீரனுார் : பழநி கீரனுார் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டின் கூரை பெயர்ந்து விழுந்ததில் மூதாட்டி காயமடைந்தார்.
பழநி கீரனுார் பகுதியில் துர்கை அம்மன் காலனி பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு 200 வீடுகள் உள்ள நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் வசித்து வரும் லட்சுமி 65 ,தலையில் கூரை பெயர்ந்து விழுந்தது.
பழநி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . இதை பழநி துணை தாசில்தார் சஞ்சய்காந்தி உள்ளிட்ட வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர்.
வீடுகளின் தற்போதைய நிலை குறித்து அறிந்து சேதமடைந்த வீடுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.