/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மரக்கன்றுகளால் இயற்கையை காக்கும் மாணவர்கள் மரக்கன்றுகளால் இயற்கையை காக்கும் மாணவர்கள்
மரக்கன்றுகளால் இயற்கையை காக்கும் மாணவர்கள்
மரக்கன்றுகளால் இயற்கையை காக்கும் மாணவர்கள்
மரக்கன்றுகளால் இயற்கையை காக்கும் மாணவர்கள்
ADDED : ஜூலை 08, 2024 12:20 AM

சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக மரக்கன்றுகள் நடவு செய்வது.பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர் நத்தம் என்.பி.ஆர்.,கல்லுாரி நிர்வாகத்தினர்.
நத்தம் என்.பி.ஆர்., கல்விக் குழும கல்லுாரிகளில் கலை,அறிவியல்,பொறியியல்,தொழில்நுட்பக்கல்லுாரியின், நர்சிங்,துணை மருத்துவ கல்லுாரிகள் சார்பாக பசுமையான கல்லுாரி வளாகம்,பசுமையான கிராமம் என்ற நோக்கில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களால் ஏராளமான மரக்கன்றுகள்,அரிய வகை மூலிகை செடிகள் நடவு செய்து வளர்க்கப்படுகிறது.
பசுமையான கல்விக் குழும வளாகத்தை உருவாக்குவதில் ஒவ்வொரு கல்லுாரிகளிலும் உள்ள நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பானது பல முன்னெடுப்புகளை செய்கின்றது. அதன் ஒரு பகுதியாக நெகிழி இல்லாத வளாகத்தை உருவாக்கும் விதமாக நெகிழியை பயன்படுத்துவதை தவிர்த்தல், நெகிழி சேகரிப்பு முதலியவை செயல்பாடுகளை செய்கின்றது. மேலும் பசுமையான வளாகத்தை உருவாக்கும் பொருட்டு நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பின் மூலம் 800 க்கு மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்து தொடர்ந்து மாணவர்களால் பராமரிக்கப்படுகின்றது.
மருத்துவக் குணம் வாய்ந்த பல்வேறு மூலிகை செடிகளை நடவு செய்து, இளைய தலைமுறையினருக்கு அறியும் வகையில், அதனை மாணவர்கள் பராமரிக்கின்றனர். மரக்கன்றுகளை வளர்ப்பதற்கு ஊக்குவிக்கும் விதமாக மாணவர்,மாணவிகளின் பிறந்த நாள் விழாவில் ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்று நடவு செய்து, அதனை பராமரிக்கின்றனர். பசுமையான வளாகத்தை பேணுவதற்கு புகையில்லாத வாகன பேட்டரி கார் வளாகத்திற்குள் பயன்படுத்தப்படுகிறது. வீணாகும் தண்ணீரை மறுசுழற்சி செய்து பசுமையான வளாகத்தை உருவாக்குகிறது. எதிர்காலத்தில் மாணவர்கள் அதிகமான மரக்கன்றுகளை தொடர்ந்து நடவுசெய்து அதனை பராமரித்து வளாகம் துாய்மையாக இருப்பதற்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நாட்டு நலப்பணித்திட்டத்தின் வாயிலாக பல்வேறு கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு இதுவரை 5000 க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமையான சமுதாயம் உருவாக என்.பி.ஆர்., கல்விக் குழும நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் செயல்பாடுகளை செய்கின்றனர்.
மரங்கள் நடுவது நல்ல விஷயம்
ஏ. அன்னலட்சுமி,மாணவி, நத்தம்: கல்லுாரிகளில் நாம் தேர்ந்தெடுத்த கல்வியை மட்டுமே கற்றுக் கொடுப்பார்கள்.
ஆனால் கல்லுாரிகளில் மரம் நடுவது, மூலிகைச் செடிகள்,மரம் வளர்ப்பதால் கிடைக்கின்ற பலன், நெகிழியை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்கு குறித்தும் கற்பிக்க வேண்டும். எங்கள் கல்லுாரி வளாகத்தில் நெகிழி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இயற்கை எழில் கொஞ்சும் வகையில் வளாகப் பகுதியில் பல ஆயிரம் மரங்களை நடவு செய்து வளர்க்கிறோம். கழிவு நீரையும் சுத்திகரித்து மரம் செடிகளுக்கு பயன்படுத்தி சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கிறோம்.
மக்கள் உணர வேண்டும்
வி. ஹரி ஆனந்த்,மாணவர், நத்தம்: மாரங்களின் முக்கியத்துவத்தை உணராமல் தொடர்ந்து மரங்களை அழித்து வருவதால் பூமியில் மனிதர்கள் வாழ்வதற்கு எதிரான கால நிலை மாற்றம், பூமி வெப்பமாதல், இயற்கை சீற்றங்கள் என சுற்றுச் சூழல் மாறி வருகிறது. இதனால் ஒரு லிட்டர் தண்ணீர் ரூ.20க்கு வாங்கிப்பருக்கும் நிலை வந்துவிட்டது. இதேநிலை தொடர்ந்தால் மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக பூமி மாறிவிடும். இயற்கையை காப்பதில் ஒவ்வொரு மனிதருக்கும் பங்கு உண்டு.
ஒவ்வொருவகும் தங்களால் இயன்ற அளவு மரங்களை நடவு செய்து வளர்ப்பதே ஒரே வழி. எங்கள் கல்லுாரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மூலம் சுற்றியுள்ள பல கிராமங்கள்,குளக்கரைகள், ரோட்டோரங்கள், பள்ளி ,கோவில் பகுதிகளிலும் இதுவரை 5000க்கு மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்து வளர்க்கிறோம்.