ADDED : ஜூலை 08, 2024 12:20 AM
திண்டுக்கல்: வேளாண் துறை மூலம் 2024--25-ல் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் உயிர்ம இயற்கை வேளாண்மையை சிறப்பான முறையில் செய்வதோடு அதனை பிற விவசாயிகளுக்கும் ஊக்கப்படுத்தும் விவசாயிகளுக்கு சிறந்த இயற்கை வேளாண் விவசாயிக்கான 'நம்மாழ்வார்' விருது மாநில அளவில் மூன்று விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. முதல் பரிசு ரூ.2.50 லட்சம், ரூ.10,000 மதிப்புள்ள பதக்கம், 2ம் பரிசு ரூ.1.50 லட்சம், ரூ. 7,000 மதிப்புள்ள பதக்கம், 3ம் பரிசு ரூ.1. லட்சம் ரூ. 5,000 மதிப்புள்ள பதக்கம், 'நம்மாழ்வார்' விருதுடன் வழங்கப்படுகிறது.
ஒரு ஏக்கர் பரப்பில் இயற்கை வேளாண்மையில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்திருப்பதுடன், முழுநேர இயற்கை விவசாயியாக இருக்க வேண்டும். 'நம்மாழ்வார்' விருது பெற விரும்பும், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் https://www.tnagrisnet.tn.gov.in/ என்ற அக்ரிஸ்நெட் இணைய தளத்தில் வரும் செப். 30க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து தங்கள் பகுதி வட்டார வேளாண் உதவி அலுவலகத்தில் ரூ.100 பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும். வட்டார வேளாண் உதவி இயக்குனர்கள்,திண்டுக்கல் வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.