/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஹாக்கி போட்டியில் மரியன்னை பள்ளி வெற்றி ஹாக்கி போட்டியில் மரியன்னை பள்ளி வெற்றி
ஹாக்கி போட்டியில் மரியன்னை பள்ளி வெற்றி
ஹாக்கி போட்டியில் மரியன்னை பள்ளி வெற்றி
ஹாக்கி போட்டியில் மரியன்னை பள்ளி வெற்றி
ADDED : ஜூலை 08, 2024 12:20 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பள்ளிகளுக்கான லீக் ஹாக்கி போட்டியில் முதலிடம் பிடித்த புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது.
திண்டுக்கல்லில் பள்ளிகளுக்கு இடையே ஹாக்கி லீக் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மண்டல அளவிலான ஹாக்கி போட்டி திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
இதில் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி அணி, வளவி செட்டியபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி அணியைவென்று முதல் பரிசை பெற்றது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு ஹாக்கி சங்க உதவி செயலாளர் மகேஸ்வரன் முன்னிலை வகித்தார்.
செயற்குழு உறுப்பினர் யூஜின் வரவேற்றார். சங்க நிறுவனர் ஞானகுரு, மாவட்ட குழந்தைகள் விளையாட்டு மேம்பாட்டு சங்க துணைத் தலைவர் சீனிவாசன் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.