ADDED : ஜூலை 08, 2024 12:20 AM
நத்தம்: திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி உத்தரவின் பேரில் நத்தம் கோவில்பட்டி, வத்திபட்டி,அரவங்குறிச்சி பகுதியில் உள்ள பானிபூரி விற்பனை செய்யும் கடைகள், தயாரிக்கப்படும் இடங்கள், விற்பனை செய்யும் தள்ளுவண்டி கடைகளில் நத்தம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கண்ணன் ஆய்வு செய்தார்.
இதில் 2 பானிபூரி கடைகளில் உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டது. தொடர்ந்து அதே கடைகளில் அதிக ரசாயன பவுடர்கள் கலந்த 2 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. சுத்தமாகவும், சுகாதாரமுறையிலும் பானிபூரி தயாரிக்க வேண்டும்.
மசாலா நீரில் செயற்கை நிறமி கலக்கப்பட்டிருப்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கப்பட்டது.