ADDED : ஜூலை 08, 2024 12:19 AM
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் மேற்கு பகுதி சுற்றுச்சுவர் அருகே கோவை, திருப்பூர், பழநி, உடுமலை, பொள்ளாச்சி செல்லும் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.
இந்த சுற்றுச்சுவர் அருகிலேயே இலவச சிறுநீர் கழிப்பறைகள் அமைக்கப்பட்டது. குறிப்பிட்ட பஸ்கள் வரும் வரை இந்த கழிப்பறைகள் முன்பு பயணிகள் காத்திருக்க வேண்டி உள்ளது. கழிப்பறைகள் தினமும் சுத்தம் செய்யாமல் இருப்பதால் சுகாததாரக்கேடு ஏற்படுகிறது. இதனால் பஸ் வரும் வரை காத்திருக்கும் பயணிகள் மூக்கை பிடித்த படி நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. சுத்தம் இல்லாத கழிப்பறைகள் நோய் தொற்றுக்கு நல்வாய்ப்பாக அமைகிறது. பயணிகளின் நலன் கருதி ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்டில் உள்ள இலவச சிறுநீர் கழிப்பறைகளை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.