/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஓடையை ஆக்கிரமித்துள்ள கட்டடங்களால் கழிவு நீர் தேக்கம் ஓடையை ஆக்கிரமித்துள்ள கட்டடங்களால் கழிவு நீர் தேக்கம்
ஓடையை ஆக்கிரமித்துள்ள கட்டடங்களால் கழிவு நீர் தேக்கம்
ஓடையை ஆக்கிரமித்துள்ள கட்டடங்களால் கழிவு நீர் தேக்கம்
ஓடையை ஆக்கிரமித்துள்ள கட்டடங்களால் கழிவு நீர் தேக்கம்
ADDED : ஜூன் 19, 2024 06:38 AM

நடவடிக்கை எடுங்க
நத்தம்- மதுரை நான்கு வழிச்சாலையில் கோவில்பட்டி பகுதியில் ஆபத்தை உணராது சரக்கு வாகனங்களில் சிறுவர்கள் பயணம் செய்கின்றனர். விபத்து அபாயம் உள்ளதால் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாட்ஷா, நத்தம்.
கழிவை அகற்றாது துர்நாற்றம்
திண்டுக்கல் மேற்கு கோபாலசமுத்திரம் கரை ரோட்டில் சாக்கடையை துார்வாரி அதன் கழிவை அகற்றாமல் அப்படியே விடப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது.கழிவு சிதறி மீண்டும் சாக்கடையில் விழுகிறது .உடனே அகற்ற வேண்டும். மாரிமுத்து, திண்டுக்கல்.
.......--------அலைக்கழிப்பு
வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையை தவறுதலாக இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மோளப்பாடியூருக்கு புதிதாக செல்வோர் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது. -ரவி, வடமதுரை.
.........--------விபத்து அபாயம்
திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் சுற்றி திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம் உள்ளது .கால்நடைகள் ஆங்காங்கே திரிவதால் வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர் கால்நடை சுற்றித் திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுரி, திண்டுக்கல்.
...........--------சேதமான பெயர் பலகை
திண்டுக்கல் மாநகராட்சி நவீன இறட்சி கூடம் பெயர் பலகையில் எழுத்துக்கள் சேதம் அடைந்துள்ளது .இதனால் இறைச்சி கூடம் எங்கு உள்ளது எனதெரியாமல் கடந்து செல்கின்றனர் .பெயர் பலகை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்துப்பாண்டி, திண்டுக்கல்.
.......--------பூசாரி ஓடையில்ஆக்கிரமிப்பு
ஆத்துார் தாலுகா அய்யம்பாளையம் - சித்ரேவு ரோட்டில் பூசாரி ஓடையை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டுவதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது .கட்டடம் கட்டுவதை தடுத்து கழிவுநீர் ஓடையை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிகண்டன், அய்யம்பாளையம்.
-சுற்றுசூழலுக்கும் பாதிப்பு
திண்டுக்கல்- திருச்சி ரோட்டில் குப்பை குவிந்து பல நாட்களாக அள்ளாமல் உள்ளதால் சுகாதாக்கேடுடன் துர்நாற்றமும் வீசுகிறது .இதோடு இதில் பிளாஸ்டிக் கலந்த குப்பையும் குவிந்து சுற்றுசூழலும் பாதிக்கிறது. சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது.பாலன், திண்டுக்கல்.
.............--