/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கிரிக்கெட் லீக்: -செயின்ட் பீட்டர்ஸ் அணி வெற்றி கிரிக்கெட் லீக்: -செயின்ட் பீட்டர்ஸ் அணி வெற்றி
கிரிக்கெட் லீக்: -செயின்ட் பீட்டர்ஸ் அணி வெற்றி
கிரிக்கெட் லீக்: -செயின்ட் பீட்டர்ஸ் அணி வெற்றி
கிரிக்கெட் லீக்: -செயின்ட் பீட்டர்ஸ் அணி வெற்றி
ADDED : ஜூன் 20, 2024 05:27 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய முதல் டிவிஷன் சூப்பர் லீக் போட்டியில் செயின்ட் பீட்டர்ஸ் அணி வெற்றி பெற்றது.
திண்டுக்கல் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடந்த போட்டியில் கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும் திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் ஜூனியர்ஸ் கிரிக்கெட் அணியும் மோதின. முதலில் போட்டிங் செய்த செயின்ட் பீட்டர்ஸ் அணி 44 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 167 ரன்கள் எடுத்தது. பிரகாஷ்ராஜ் 36, சச்சின் 51(நாட் அவுட்) ரன்கள் எடுத்தனர். ஸ்ரீமுகேஷ்வரன் 4, மாறன், அஜித் மணி தலா 3 விக்கெட்ளை கைப்பற்றினர்.
தொடர்ந்து சேசிங் செய்த விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் அணி 36.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 143 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. சச்சின் 4, முகமது ரபீக் 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.ஆர்.வி.எஸ்., கல்லுாரி மைதானத்தில் நடந்த மற்றொரு சூப்பர் லீக் போட்டியில் திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் ஜூனியர்ஸ் கிரிக்கெட் அணி, திண்டுக்கல் ஹரிவர்னா கிரிக்கெட் கிளப் அணியுடன் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த விக்னேஷ் ஸ்போடர்ஸ் அணி 34.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது. முகமது யூசூப் 32 ரன்கள் எடுக்க கிேஷார் குமார் 3 விக்கெட்கள் எடுத்தார்.
தொடர்ந்து சேசிங் செய்த ஹரிவர்னா கிரிக்கெட் அணி 21.4 ஓவர்களில் 8 விக்கெட்கள் பறிகொடுத்து 114 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சஞ்சய் வெங்கடேஷ்வர் 28 ரன்கள் எடுக்க அஜித்மணி 3 விக்கெட்கள் எடுத்தார்.