ADDED : ஜூன் 03, 2024 04:06 AM

நத்தம்: நத்தம் பண்ணுவார்பட்டி ஊராட்சி பாலப்பநாயக்கன்பட்டியில் கலெக்டர் பூங்கொடி உத்தரவுப்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.9.67 லட்சம் மதிப்பில் புதிய சிறுகுளம் உருவாக்கும் பணி நடந்தது.
100நாள் வேலை திட்ட பணியாளர்களை கொண்டு வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா மேற்பார்வையில் இப்பணிகள் தொடங்கபட்டது. ஊராட்சி தலைவர் ஆண்டிச்சாமி, உதவி பொறியாளர் கணேஷ்பாபு, பணி மேற்பார்வையாளர் அருள்கொடி, ஊராட்சி செயலாளர் கருப்பையா பங்கேற்றனர். மழை காலங்களில் நீரை சேமிக்கவும், கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிக்க இந்த குளங்கள் உருவாக்கப்படுவதாகவும் தெரிவிக்கபட்டது.