ADDED : ஜூன் 03, 2024 04:06 AM
பொதுக்குழு கூட்டம்
திண்டுக்கல்: தேசிய,மாநில வூசு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்,சங்க பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. சங்க செயலர் ஜாக்கி சங்கர் தலைமை வகித்தார்.பொருளாளர் கவிதா வரவேற்றார். துணைத் தலைவர் கவுதம்,பிட்னஸ் கோச் டெபி, பிட்னஸ் கப் உரிமையாளர் டெபி குரு முன்னிலை வகித்தனர். பட்டேல் ஹாக்கி சங்க செயலாளர் ஞானகுரு வாழ்த்தினார். மாவட்ட தலைவர் மணிகண்டன் பங்கேற்று தேசிய,மாநில அளவிலான போட்டிகளில் பதக்கம் பெற்றவர்களுக்கு பரிசு ,சான்றிதழ்களை வழங்கினார். துணைத் தலைவர் கார்த்திக் குமார், துணைச் செயலாளர்கள் சாலமன் சேவியர், கணேசன் பங்கேற்றனர்.
கண் சிகிச்சை முகாம்
நத்தம்:-நத்தத்தில் ராம்சன்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை,ராம்சன்ஸ் பள்ளி குழுமம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. பள்ளியின் தாளாளர் ராமசாமி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் தேவகி,முகாம் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், பள்ளி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் பாஸ்கரன் ஆகியோர் வகித்தனர். மதுரை மீனாட்சி மிஷன் கண் மருத்துவர் சுரேஷ்குமார் மருத்துவ குழுவினர் பங்கேற்று பொதுமக்களுக்கு கண்புரை,பார்வை குறைபாடு, கண் எரிச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். கண்புரை அதிகம் உள்ள 25 பேர் அறுவை சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 200-க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.