/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பாலியல் தொல்லை கொடுத்து கொலை: வாலிபருக்கு ஆயுள் பாலியல் தொல்லை கொடுத்து கொலை: வாலிபருக்கு ஆயுள்
பாலியல் தொல்லை கொடுத்து கொலை: வாலிபருக்கு ஆயுள்
பாலியல் தொல்லை கொடுத்து கொலை: வாலிபருக்கு ஆயுள்
பாலியல் தொல்லை கொடுத்து கொலை: வாலிபருக்கு ஆயுள்
ADDED : ஜூன் 06, 2024 04:21 AM

திண்டுக்கல் ; திண்டுக்கல்லில் தனியார் கல்லுாரி ஊழியரின் கை,கால்களை கட்டிப்போட்டு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்த வாலிபர் சிவக்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திண்டுக்கல் நாயக்கர் புதுத்தெருவை சேர்ந்த தனியார் கல்லுாரி ஊழியர் மணிகண்டன்40. இவர் 2020ல் திண்டுக்கல் மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த வாலிபர் சிவக்குமார்21, தாடிக்கொம்புரோடு பாலதிருப்பதியை சேர்ந்த 16 வயது சிறுவனுடன் சேர்ந்து மது அருந்தினர். அப்போது சிவக்குமாரும்,சிறுவனும் சேர்ந்து மணிகண்டனின் கை,கால்களை கட்டி ஆடைகளை கிழித்து பாலியல் தொந்தரவு கொடுத்தனர். மணிகண்டன் சத்தமிட இருவரும் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தனர். திண்டுக்கல் மேற்கு போலீசார் இருவரையும் கைது செய்தனர். இதன்வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த நீதிபதி மெகபூப்அலிகான்,குற்றவாளி சிவக்குமாருக்கு ஆயுள் தண்டனை ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.