/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ செய்தி சில வரிகளில் கிடங்கிற்கு வந்த இயந்திரங்கள் செய்தி சில வரிகளில் கிடங்கிற்கு வந்த இயந்திரங்கள்
செய்தி சில வரிகளில் கிடங்கிற்கு வந்த இயந்திரங்கள்
செய்தி சில வரிகளில் கிடங்கிற்கு வந்த இயந்திரங்கள்
செய்தி சில வரிகளில் கிடங்கிற்கு வந்த இயந்திரங்கள்
ADDED : ஜூன் 06, 2024 05:11 AM
கிடங்கிற்கு வந்த இயந்திரங்கள்
திண்டுக்கல்: லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவிற்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பயன்படுத்தப்பட்டன. ஓட்டுப்பதிவிற்கு பின் அண்ணா பல்கலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு நேற்று முன்தினம் ஓட்டு எண்ணும் பணி நடைபெற்றது. தொடர்ந்து இயந்திரங்கள் கலெக்டர் அலுவலக பாதுகாப்பு கிடங்குக்கு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டன. கிடங்கிற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
காற்றில் வீடுகள் சேதம்
செம்பட்டி : அக்கரைப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார். வெளியூரில் தங்கி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் தந்தை ஆறுமுகம் 65, சதீஷ்குமார் மனைவி பவித்ரா 27, குழந்தைகள் ஹரிஷ் 8, விஷ்ணு 5, உள்ளனர். நேற்று முன்தினம் இரவில் இப்பகுதியில் பலத்த காற்று வீசியது. இதில் வீட்டின் அருகே இருந்த வேப்பமரம் முறிந்து விழுந்ததில் சிமென்ட் தகடு கூரை சேதம் அடைந்தது. வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த 4 பேரும் அலறியபடி வெளியில் ஓடி வந்தனர். ஆத்துார் வருவாய்துறை அலுவலர்கள் விசாரித்தனர்.