ADDED : மார் 14, 2025 06:05 AM
வத்தலகுண்டு: மவுன்ட் சியோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு, விளையாட்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் லின்னி நோரிஸ் தலைமை வகித்தார்.
முதல்வர் ஆத்தியப்பன் வரவேற்றார். மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக தலைவர் செண்பகமூர்த்தி தேசிய கொடி ஏற்றினார். செயலாளர் ஞானவேல் ஒலிம்பிக் கொடி, தீபத்தை ஏற்றினார். விளையாட்டுப் போட்டிகளை உடற்கல்வி ஆசிரியர்கள் ராமச்சந்திரன், மதுரை வீரன், தமிழரசி நடத்தினர். ஆசிரியர் பிரசன்னாதேவி நன்றி கூறினார்.