UPDATED : மார் 14, 2025 06:18 PM
ADDED : மார் 14, 2025 06:05 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் தெற்கு ரத வீதியில்
செயல்பட்டு வரும் வேணு பிரியாணி ஓட்டல் நிறுவனம் திருச்சி தேசிய
நெடுஞ்சாலையில் செட்டிநாயக்கன்பட்டி பிரிவில் மகிஸ் கேஸ்டில் என்ற பெயரில்
இரண்டாவது கிளை தொடங்கி உள்ளது .இதன் திறப்பு விழாவில் நிறுவனத்தினரின்
உருவப்படத்திற்கு குடும்பத்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்து
வழிபட்டனர்.
புதிதாக கட்டப்பட்டுள்ள மூன்று மாடி கட்டடங்களில்
தரைதளம் ஒட்டல், மற்ற மூன்று தலங்களும் 500 பேர் அமரும் குளிரூட்டப்பட்ட
மினிமீட்டிங் ஹால், உணவு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் சமூக
நீதி அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் கண்காணிப்புக்குழு உறுப்பினர்
ஸ்ரீராம், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன்,
திண்டுக்கல் சீனிவாசன், மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மாநகராட்சி
எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர் ராஜசேகர், பா.ஜ.,
முன்னாள் மாவட்ட தலைவர் தனபாலன், மேற்கு மாவட்ட தி.மு.க., பொருளாளர்
விஜயன், திண்டுக்கல் வர்த்தக சங்கத் தலைவர் சுந்தர்ராஜன், பி.எம்.எஸ்.,
முருகேசன் திண்டுக்கல் ஓட்டல் உரிமையாளர் நல சங்க தலைவர் ராஜ்குமார்,
செயலாளர் வெங்கடேஷ், பொருளாளர் ரமேஷ், நகர தலைவர் காளிதாஸ், ஈடன் கார்டன்
உரிமையாளர் கென்னடி, டால்பின் ஓட்டல் உரிமையாளர் சுரேஷ், கோல்ட் ஸ்டார்
உரிமையாளர் வேணு, தொழிலதிபர்கள் அமர்நாத், சுஜித் காசிராஜ் நடராஜன், வாசவி
தங்க மாளிகை உரிமையாளர் மேடா ரவி, ஒரிஜினல் வாசவி ஜூவல்லரி உரிமையாளர்
தினேஷ், எம்.எஸ்.பி., பள்ளி தாளாளர் முருகேசன், பொறியாளர் தர்மலிங்கம்,
வீரமார்பன் ஆர்கிடெக் கருணாகரன், பத்மா லைட்ஸ் உரிமையாளர் ரவி, உணவு
பாதுகாப்பு அதிகாரி செல்வம் கலந்து கொண்டனர். மகேஸ்வரி ஜெகநாதன்
அம்ரித்தா ராய், யோகித்தா ராய் நன்றி கூறினர்.