/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/உணவகங்களில் இல்லை விலை பட்டியல்: அவசியமாகிறது உணவு துறை நடவடிக்கை உணவகங்களில் இல்லை விலை பட்டியல்: அவசியமாகிறது உணவு துறை நடவடிக்கை
உணவகங்களில் இல்லை விலை பட்டியல்: அவசியமாகிறது உணவு துறை நடவடிக்கை
உணவகங்களில் இல்லை விலை பட்டியல்: அவசியமாகிறது உணவு துறை நடவடிக்கை
உணவகங்களில் இல்லை விலை பட்டியல்: அவசியமாகிறது உணவு துறை நடவடிக்கை
UPDATED : மார் 14, 2025 07:00 AM
ADDED : மார் 14, 2025 06:06 AM

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான உணவகங்களில் விலைபட்டியல் இல்லாதததால் இதை வைக்க உணவு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் விவசாயமே பிரதானம் என்ற நிலையில் சுற்றுலா, ஆன்மிகம், காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு பிரசித்தி பெற்ற மாவட்டமாக உள்ளது. நாள்தோறும் ஏராளமானோர் வருகை தரும் நிலையில் வருகை தருவோர் உணவகங்களை நாட தவறுவதில்லை. உணவகங்களில் விலை பட்டியல் ,உணவு பட்டியல் குறித்த தெளிவான அறிக்கை இல்லாத நிலையில் வாடிக்கையாளர்கள் கூடுதல் தொகை அளிக்கும் போக்கு உள்ளது. விலை தெரியாததால் அவ்வப்போது வாக்குவாதங்கள் ஏற்படும் சூழலும் அதிகரித்து வருகின்றன.இதில் குறிப்பாக கொடைக்கானல், பழநி ,ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இப்பிரச்னை அதிகம் எழுகின்றன. சுற்றுலா நகரில் கூடுதல் பயணிகள் வரும் நிலையில் விலை அதிகரிப்பதாக குற்றச்சாட்டும் உள்ளது.
தரமற்ற உணவுகள் சப்ளை செய்யப்படுவதால் உடல் உபாதைகளுக்கும் ஆளாகின்றனர். இது போன்ற பிரச்னைகளை தவிர்க்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்தும் கிடப்பில் உள்ளது. உணவுத்துறை அதிகாரிகளும் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. மாவட்டம் முழுவதும் ஆடம்பரமான உணவகம் முதல் சாதாரண ரோட்டோர கடைகள் வரை விலைப்பட்டியல் என்பது இல்லாத நிலையில் வாடிக்கையாளர்கள் பாதிக்கின்றனர். இதை தவிர்க்க உணவுத்துறை அதிகாரிகள் உணவு பட்டியல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் குறித்து தெரிவிக்க தொலைபேசி எண்களையும் அறிவிப்பு பலகையில் இடம்பெற செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
............
நடவடிக்கை எடுங்க
மாவட்டத்தை பொருத்தமட்டில் ஏராளமான உணவகங்கள் செயல்படுகின்றன. குறிப்பிட்ட சில உணவகங்களில் மட்டுமே விலை பட்டியலை காண முடிகிறது. இவ்வாறான நிலை மற்ற உணவகங்களில் இல்லாத நிலையில் வாடிக்கையாளர்கள் பாதிக்கின்றனர். இதை தவிர்க்க உணவகங்களின் நுழைவாயிலில் உணவு பட்டியலுடன் கூடிய விலைப்பட்டியலை அறிவிப்பு பலகையில் இடம்பெற செய்ய வேண்டும். உணவு குறித்த புகார் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் உணவுத்துறை அதிகாரிகளின் அலைபேசி எண்களையும் இதில் தெரிவிக்க வேண்டும். மேலும் உணவுத்துறை அதிகாரிகளும் அவ்வப்போது சம்பந்தப்பட்ட உணவகங்களில் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு தரமான உணவுகள் சப்ளை செய்யப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தவறு இருக்கும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விலைப்பட்டியல் இல்லாத உணவகங்ளுக்கு முதற்கட்டமாக அபராதம் விதித்து இந் நடைமுறையை அமல்படுத்த முன்வர வேண்டும்.
தினகரன், இயற்கை ஆர்வலர் ,கொடைக்கானல்.