எரியோட்டில் ரோடு பள்ளம் சீரமைப்பு
எரியோட்டில் ரோடு பள்ளம் சீரமைப்பு
எரியோட்டில் ரோடு பள்ளம் சீரமைப்பு
ADDED : ஜூன் 17, 2024 12:35 AM

எரியோடு : தினமலர் செய்தி எதிரொலியாக எரியோட்டில் விபத்து ஏற்படுத்தும் வகையிலிருந்த ரோடு பள்ளம் சீரமைக்கப்பட்டுள்ளது.
எரியோட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதியில் அய்யலுார் ரோடையும், வடமதுரை ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் அரை கி.மீ., துார இணைப்பு ரோடு உள்ளது.
வடமதுரை வேடசந்துார் இடையே இயக்கப்படும் அனைத்து பஸ்களும் இவ்வழியே தான் எரியோடு பஸ் நிறுத்தம் சென்று புறப்படும்.
இதுதவிர பாகாநத்தம், கொம்பேரிபட்டி, சித்துவார்பட்டி, அய்யலுார் பகுதியினர் எரியோடு ஊருக்குள் செல்லாமல் புறவழியில் போக்குவரத்து நெரிசலின்றி செல்ல இது உதவுகிறது.
இங்கு இரு இடங்களில் மெகா அளவு பள்ளம் ஏற்பட்டு குண்டும், குழியுமாக டூவீலர்களை விபத்தில் சிக்க வைக்கும் நிலையில் ஆபத்தாக இருந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் இன்பாக்ஸ் பகுதியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ரோடு பள்ளங்களை மண்ணை கொட்டி அதிகாரிகள் சீரமைத்தனர்.