/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஒரே இடத்தில் 150 பேருக்கு காதணி விழா ஒரே இடத்தில் 150 பேருக்கு காதணி விழா
ஒரே இடத்தில் 150 பேருக்கு காதணி விழா
ஒரே இடத்தில் 150 பேருக்கு காதணி விழா
ஒரே இடத்தில் 150 பேருக்கு காதணி விழா
ADDED : ஜூன் 17, 2024 12:35 AM
வடமதுரை: வடமதுரை கா.புதுப்பட்டியில் குலாலர் சமூகத்தின் புக்கன பள்ளிவார் குல தெய்வமான பட்டாள ஈஸ்வரி கோயில் உள்ளது. இங்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை குல தெய்வ வழிபாடு நடக்கும். குழந்தைகளுக்கு பெயர் சூட்டுதல், காதணி விழா போன்ற நிகழ்வுகளை கோயிலில் வைத்து நடத்துகின்றனர்.
5 ஆண்டு இடைவெளியில் நேற்றுமுன்தினம் மாலை கிராமத்திற்கு பழம் வைத்தல் நிகழ்வுடன் விழா துவங்கியது. ஸ்ரீமத் கள்ளியடி குருநாதர் கோயில் முன்பாக பட்டாள ஈஸ்வரி, பேச்சம்மாள், அவிளியம்மாள், ஆரத்தி வெள்ளையம்மாள், நாகம்மாள், லாட சன்னாசி, கரவண்டராயர், கருப்பணசாமி, பைரவர் தெய்வங்களுக்கு கண் திறப்பு நடந்தது. சுவாமிகள் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தது. பாரம்பரிய வழிபாடுகளுடன் 150 குழந்தைகளுக்கு நேற்று காதணி விழா நடந்தது. அசைவ விருந்து வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு இன்று பாரம்பரிய முறைப்படி நடக்கும் பெயர் சூட்டுவிழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.