நத்தத்தில் புரவி எடுப்பு திருவிழா
நத்தத்தில் புரவி எடுப்பு திருவிழா
நத்தத்தில் புரவி எடுப்பு திருவிழா
ADDED : ஜூன் 17, 2024 12:36 AM

நத்தம் : நத்தம் லிங்கவாடி மலை உச்சியில் உள்ள எல்.மலையூர் மாலைத்தாய், பாரிகருப்பு, முத்தையா சுவாமி,சடையாண்டி சுவாமி கோயில்களில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் மலைப் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமிகள்,கன்னிமார்,குதிரை, மதிலை சிலைகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு ஊர் மந்தையில் கண் திறக்கப்பட்டது.
கோயிலுக்குள் சென்ற சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனைகள் நடந்தது. நேற்று மாலையில் வாணவேடிக்கைகள், வர்ணக் குடைகளுடன் பாரி கருப்பு சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக இருப்பிடம் போய் சேர்கிறது. ஏராளமான மலை கிராம பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.