ADDED : ஜூலை 28, 2024 06:33 AM
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தமிழ்நாடு சத்துணவு , அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் திண்டுக்கல் ஒன்றிய பேரவை கூட்டம் நடந்தது.ஒன்றிய தலைவர் மரியம் சேவியர் ராஜ் தலைமை வகித்தார். வட்டார துணைத்தலைவர் ராமர் வரவேற்றார். மாவட்ட செயலர் செல்வராஜ், வட்டார செயலர் நாராயணசாமி, மாவட்ட இணைச்செயலர் தமிழரசன், முன்னாள் துணைத்தலைவர் மரிய புஷ்பம், நிர்வாகி தண்டபாணி,மாவட்ட பொருளாளர் குமரம்மாள், தலைவர் வேலுச்சாமி பேசினர்.
வட்டார தலைவராக ராமர், துணைத்தலைவர்களாக விசாலாட்சி, இளங்கோவன், செண்பகம், செயலாளராக மரிய சேவியர்ராஜ், இணைச் செயலர்களாக சாவித்திரி, அமுதா, பொன் ஜீவரத்தினம், மாவட்ட செயற்குழு உறுப்பினராக கலா தேர்வு செய்யப்பட்டனர். ஆகஸ்ட் 5ல் கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் ஊராட்சி அலுவலகம் முன்பு நடக்கும் பெருந்திரள் முறையீட்டில் ஓய்வூதியர்கள் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.