ADDED : ஜூலை 28, 2024 06:33 AM
வடமதுரை : அய்யலுார் தங்கம்மாபட்டியில் கார் டிரைவரிடம் வழிப்பறி செய்த வழக்கில் நத்தம் பகுதியை சேர்ந்த சரவணன் 55 ,கைது செய்யப்பட்டார்.
ஜாமினில் வெளியே வந்த சரவணன் இரு ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். வேடசந்துார் நீதிமன்ற உத்தரவையடுத்து வடமதுரை இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் எரியோடு புதுரோடு உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த சரவணனை கைது செய்தனர்.