ADDED : ஜூலை 03, 2024 05:45 AM
கொடைக்கானல் : கொடைக்கானலில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
நிறுவனத் தலைவர் ஜெயம் பாண்டியன் தலைமை வகித்தார். தலைவராக பாக்கியலட்சுமி இளங்கோ, கவுரவ தலைவராக பொன் பாஸ்கர், செயலாளராக மகேந்திரன் தேர்வு செய்யப்பட்டனர். கட்டணத்தை ஒரே மாதிரியாக நிர்ணயம் செய்ய வேண்டும். அரசு ஆம்னி பஸ்சை வாடகைக்கு எடுத்து நடத்த உரிமையாளர்கள் சம்மதம் தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தலைவர் இளங்கோ நன்றி கூறினார்.