/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ டிப்பர் லாரிகளால் மேடு பள்ளமாக மாறும் ரோடுகள் டிப்பர் லாரிகளால் மேடு பள்ளமாக மாறும் ரோடுகள்
டிப்பர் லாரிகளால் மேடு பள்ளமாக மாறும் ரோடுகள்
டிப்பர் லாரிகளால் மேடு பள்ளமாக மாறும் ரோடுகள்
டிப்பர் லாரிகளால் மேடு பள்ளமாக மாறும் ரோடுகள்
ADDED : ஜூலை 03, 2024 05:47 AM

கழிவுகளால் நோய் தொற்று
பழநி சித்த கல்லுாரி கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் குப்பை, இறைச்சி கழிவுகள் கட்டுமான பொருட்கள் என பல வகையான பொருட்களை குவித்து வருகின்றனர் .இதனால் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு நேய் பரவும் அபாயம் உள்ளது . கிருஷ்ணசாமி, பழநி.
.........------சேதமடைந்த மின்கம்பம்
திண்டுக்கல் சுண்ணாம்பு காளவாசல் நகர் ரோட்டில் மின்கம்பம் சேதமடைந்து கம்பி வெளியே தெரிகிறது . எந்த நேரத்திலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. மின்கம்பத்தை மாற்ற துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் சின்னச்சாமி, திண்டுக்கல்.
....................
------ரோடு பள்ளத்தால் விபத்து
திண்டுக்கல் - பழநி பைபாஸ் ரோடு வருமான வரித்துறை அலுவலகம் அருகில் ரோடு சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால் விபத்து நடக்கிறது .மழை நேரங்களில் தண்ணீர் தேங்க பள்ளம் தெரியாமல் டூ வீலர் ஓட்டிகள் கீழே விழுகின்றனர் . சொக்கலிங்கம், திண்டுக்கல்.
...............-------லாரிகளால் சேதமான ரோடு
புதுச்சத்திரத்தில் இருந்து பொம்மநல்லுார் ரோட்டில் கல்குவாரியில் இருந்து அதிக எடையுடன் வரும் டிப்பர் லாரிகளால் ரோடு குண்டு குழியுமாக மாறி உள்ளது . டூவீலர்கள் ஓட்டிகளுக்கும் விபத்து அபாய சூழ்நிலை உருவாகி உள்ளது . கி.ரங்கசாமி, கம்பளி நாயக்கன்பட்டி.
..........--------புகையால் மூச்சு விட சிரமம்
ஒட்டன்சத்திரம் நகராட்சி செக் போஸ்ட் ராவுண்டானா அருகில் உள்ள பூங்கா இடத்தில் 2 நாட்களுக்கு ஒரு முறை குப்பையை தீ வைத்து எரிப்பதால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் மக்கள் மூச்சு விட சிரமப்படுகின்றனர் .வெங்கட்பிரபு ,ஒட்டன்சத்திரம்.
...................--------பலகையை மறைக்கும் மரக் கிளைகள்
பழநி- திண்டுக்கல் ரோடு காலேஜ் பஸ் ஸ்டாப்பில் இருந்து இடும்பன் கோயில் செல்லும் ரோட்டில் எச்சரிக்கை பலகையை மரக் கிளைகள் மறைத்துள்ளதால், வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் விபத்து அபாயம் உள்ளது. இதை அகற்ற வேண்டும். செபாஸ்டியன், பழநி.
........--------சாக்கடையில் அடைப்பு
திண்டுக்கல் சின்ன அய்யங்குளம் பகுதியில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது .இதனால் குடியிருப்பு பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர் .கால்வாயில் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்துவேல், அய்யங்குளம்.
............---