/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சர்வீஸ் ரோட்டில் இல்லை விளக்குகள்; அடிக்கடி துண்டிக்கப்படும் மின்சாரம் சர்வீஸ் ரோட்டில் இல்லை விளக்குகள்; அடிக்கடி துண்டிக்கப்படும் மின்சாரம்
சர்வீஸ் ரோட்டில் இல்லை விளக்குகள்; அடிக்கடி துண்டிக்கப்படும் மின்சாரம்
சர்வீஸ் ரோட்டில் இல்லை விளக்குகள்; அடிக்கடி துண்டிக்கப்படும் மின்சாரம்
சர்வீஸ் ரோட்டில் இல்லை விளக்குகள்; அடிக்கடி துண்டிக்கப்படும் மின்சாரம்

இறைச்சிக் கழிவுகளால் துர்நாற்றம்
வி.ராமசாமி, பா.ஜ., நகர துணை தலைவர்: பைபாஸ் ரோடுப் பகுதியில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. கூடலிங்கபுரத்தில் சுகாதார வளாகம் இல்லாததால் திறந்த வெளியே கழிப்பிடமாக பயன்படுத்தப்படுகிறது. தாராபுரம் ரோட்டில் இருந்து ஆத்துார் செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பைபாஸ் ரோடு பகுதியில் தெருவிளக்குகள்,வார்டு பகுதியில் அடிக்கடி கொசு மருந்து அடிக்க வேண்டும்.
அறிவிக்காத மின்தடையால் அவதி
கே. சுரேஷ்குமார், அ.தி.மு.க., வார்டு செயலாளர்: ஆத்துார், பொன்னகரம், குறிஞ்சி நகரில் உள்ள ரோடுகள் சேதமடைந்துள்ளது. இவற்றை சீரமைக்க வேண்டும். காலை வேளையில் மின்சாரம் அடிக்கடி தடைபடுவதால் பாதிப்பு ஏற்படுகிறது. ஆத்துார் பகுதியில் சாக்கடை சீராக அமைக்கப்படாமல் மேடும், பள்ளமாக உள்ளதால் கழிவுநீர் தேங்கி உள்ளது. குழாய் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட ரோடுகளை விரைந்து சீரமைக்க வேண்டும்.
நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு
க.சாந்தி, கவுன்சிலர் (தி.மு.க.,): அமைச்சரின் முயற்சியால் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குறிஞ்சி நகரிலிருந்து சீத்தப்பட்டிக்கு புதிதாக ரோடு போடப்பட்டுள்ளது. ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அங்கன்வாடிக்கும் புதிய கட்டடம் கட்டப்படும். பொன்னகரம் - கொல்லப்பட்டி இணைப்பு ரோடு உட்பட பல இடங்களில் புதிதாக ரோடு போடப்பட்டுள்ளது.