/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கள்ளர் பள்ளிகளில் மாணவர்கள் புறக்கணிப்பு கள்ளர் பள்ளிகளில் மாணவர்கள் புறக்கணிப்பு
கள்ளர் பள்ளிகளில் மாணவர்கள் புறக்கணிப்பு
கள்ளர் பள்ளிகளில் மாணவர்கள் புறக்கணிப்பு
கள்ளர் பள்ளிகளில் மாணவர்கள் புறக்கணிப்பு
ADDED : ஜூலை 13, 2024 05:06 AM
திண்டுக்கல் : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள்,ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க அரசு முடிவு செய்ததது.
இதை அரசு கைவிட கோரி திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் செயல்படும் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஒருநாள் பள்ளிக்கு அனுப்பாமல் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்துவதாக பார்வர்டு பிளாக் , அனைத்து பிரமலைக்கள்ளர் சமூக நலக்கூட்டமைப்பு, கள்ளர் சீரமைப்பு மீட்புக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது. மாவட்டத்தில் 62 பள்ளிகள் செயல்படும் நிலையில் திண்டுக்கல் சென்னம்நாயக்கன்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி, காமபிள்ளைசத்திரம் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் படிக்கும் 30 சதவீதம் மாணவர்கள் நேற்று பள்ளிக்கு நேற்று வராமல் புறக்கணித்தனர்.