/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தடுப்புகளில் இல்லை ஒளிரும் விளக்குகள்; தொடரும் விபத்துக்களால் பலரும் பாதிப்பு தடுப்புகளில் இல்லை ஒளிரும் விளக்குகள்; தொடரும் விபத்துக்களால் பலரும் பாதிப்பு
தடுப்புகளில் இல்லை ஒளிரும் விளக்குகள்; தொடரும் விபத்துக்களால் பலரும் பாதிப்பு
தடுப்புகளில் இல்லை ஒளிரும் விளக்குகள்; தொடரும் விபத்துக்களால் பலரும் பாதிப்பு
தடுப்புகளில் இல்லை ஒளிரும் விளக்குகள்; தொடரும் விபத்துக்களால் பலரும் பாதிப்பு
ADDED : ஜூன் 08, 2024 05:51 AM

நத்தம் : நத்தம் நெடுஞ்சாலை தடுப்புகளில் ஒளிரும் மின் விளக்குகள் இல்லாததால் 2 நாட்களில் ஒரே இடத்தில் 2 விபத்து நடக்க வாகனங்கள் சேதமடைந்தன.தொடரும் விபத்துக்களால் பலரும் பாதிக்கும் நிலையும் தொடர்கிறது .
நத்தம் திண்டுக்கல் நெடுஞ்சாலை மெய்யம்பட்டி பகுதியில் சாலை நடுவே உள்ள தடுப்புகளில் எச்சரிக்கை விளக்குகள் இல்லாமல் உள்ளதால் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. இந்த இடத்தில் நேற்று நள்ளிரவு கோயம்புத்துாரில் இருந்து காரைக்குடிக்கு சென்ற தனியார் பஸ் ஒன்று சாலை தடுப்பில் மோதி விபத்துக்கு உள்ளானது.
இதில் பஸ்சின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் சாலையில் போடப்பட்டுள்ள வெள்ளைக் கோட்டில் ஒளிரும் விளக்குகள் இல்லாததால் விபத்துகள் அதிகம் நடப்பதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். இதே இடத்தில் நேற்று முன்தினம் இரவு சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளாக டிரைவர் காயம் அடைந்தார். தொடர்ந்து இங்கு விபத்து நடப்பதால் சம்பந்தபட்ட அதிகாரிகள் சாலையோர தடுப்பின் நடுவே எச்சரிக்கை விளக்குகள் அமைக்க வேண்டும்.
மேற்கண்ட விபத்து தொடர்பாக நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.