/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ போலீஸ் செய்திகள்: வாலிபருக்கு சிறை போலீஸ் செய்திகள்: வாலிபருக்கு சிறை
போலீஸ் செய்திகள்: வாலிபருக்கு சிறை
போலீஸ் செய்திகள்: வாலிபருக்கு சிறை
போலீஸ் செய்திகள்: வாலிபருக்கு சிறை
ADDED : ஜூன் 08, 2024 05:52 AM
வாலிபருக்கு சிறை
திண்டுக்கல் : நத்தம் ஆர்.புதுக்கோட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ்25. 2022ல் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்தார். இதன் வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த நீதிபதி சரண்,குற்றவாளி சுரேசுக்கு,25 ஆண்டுகள் சிறை தண்டனை,ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
டூவீலர் திருடிய இருவர் கைது
திண்டுக்கல் :திண்டுக்கல் நகரில் ரோட்டோரங்களில் நிறுத்தப்படும் டூவீலர்கள் திருட்டு தொடர்பாக வடக்கு இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி,எஸ்.ஐ.,ராஜகோபால்,தனிப்படை எஸ்.எஸ்.ஐ.,வீரபாண்டி உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையிலான போலீசார் சி.சி.டி.வி.,காட்சிகளை ஆய்வு செய்தனர். குறிப்பிட்ட 2 நபர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் நகருக்குள் சுற்றித்திரிந்தது தெரிந்தது. அவர்கள் யார் என்பது குறித்த விசாரணையில் கரூர் பாலவிடுதி குரும்பபட்டியை சேர்ந்த ஜெயபால்,கரூர் கிருஷ்ணராயபுரம் பிச்சம்பட்டியை சேர்ந்த உதயநிதி என்பதும், இவர்கள் திண்டுக்கல் நகரில் 6 டூவீலர்களை திருடியது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 6 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.
6 பேருக்கு குண்டாஸ்
திண்டுக்கல் : நிலக்கோட்டை கரியாம்பட்டி உட்கடை நடுப்பட்டி கிராமத்தில் இருதரப்பினர் இடையே நடந்த மோதலில் கரியாம்பட்டியை சேர்ந்த ஆண்டார் கொலை செய்யப்பட்டார் . கரியாம்பட்டியை சேர்ந்த சக்திவேல்,மருதை,லோகநாதன்,ரமேஷ்குமார்,விக்னேஷ்வர்,கார்த்திக் ஆகியோரை நிலக்கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திண்டுக்கல் எஸ்.பி.,பிரதீப் பரிந்துரையில் கலெக்டர் பூங்கொடி உத்தரவில் 6 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.