Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாணவர்கள் விடுதியில் சேர அழைப்பு

மாணவர்கள் விடுதியில் சேர அழைப்பு

மாணவர்கள் விடுதியில் சேர அழைப்பு

மாணவர்கள் விடுதியில் சேர அழைப்பு

ADDED : ஜூன் 08, 2024 05:52 AM


Google News
திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி அறிக்கை : பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் மாணவர்களுக்கென 49 விடுதிகள் செயல்படுகின்றன.

பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 வரை, கல்லுாரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐ.டி.ஐ., ,பாலிடெக்னிக் மாணவர்களும் சேர தகுதி உடையவர்கள்.

பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ2லட்சம் மிகாமல் இருக்க வேண்டும். கல்வி நிலையம் 8 கி.மீட்டருக்குள் இருக்க வேண்டும். துார விதி மாணவிகளுக்கு பொருந்தாது.

கல்லுாரி மாணவர்கள் ஜூன் 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us