/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ குப்பை தடுக்க கோலமிட்டு விழிப்புணர்வு குப்பை தடுக்க கோலமிட்டு விழிப்புணர்வு
குப்பை தடுக்க கோலமிட்டு விழிப்புணர்வு
குப்பை தடுக்க கோலமிட்டு விழிப்புணர்வு
குப்பை தடுக்க கோலமிட்டு விழிப்புணர்வு
ADDED : ஜூன் 08, 2024 05:51 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் குப்பையை ரோடுகளில் போடாமல் தடுக்க வீடுகளில் மக்கும்,மக்காத குப்பையாக தரம்பிரித்து வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி ரோட்டோர குப்பை தொட்டிகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது. தினமும் காலை,மாலை 2 நேரமும் துாய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பையை சேகரிக்கின்றனர். இருந்தபோதிலும் சிலர் குப்பையை பொது இடங்களில் குவித்து வைக்கின்றனர்.
இதைத்தடுக்கும் விதமாக கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் மாநகர நல அலுவலர் பரிதாவாணி,சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் நகர் முழுவதும் ஆய்வு செய்து குப்பை குவிக்கப்பட்ட பகுதியில் அகற்றி அதே இடத்தில் அரிசி மாவை பயன்படுத்தி கோலம் வரைந்து வருகின்றனர். அப்பகுதி மக்களிடம் ரோட்டோரங்களில் குப்பை கொட்ட கூடாது என விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.