ADDED : ஜூன் 29, 2024 04:44 AM

நத்தம் : நத்தம் காமராஜ் நகர் பத்திரகாளியம்மன் கோயில் திருவிழா ஜூன் 18 ல் துவங்கியது.
அழகர் கோயிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனர். நேற்று காப்பு கட்டிய பக்தர்கள் அம்மன் குளம் சென்று சிறப்பு பூஜைகள் செய்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக மாரியம்மன் கோயில் வந்து பூஜை செய்தனர். பஜார் தெரு வழியாக பத்திரகாளியம்மன் கோயில் வந்து கம்பத்தில் பால் ஊற்ற சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.