ADDED : ஜூன் 03, 2024 04:08 AM

சாணார்பட்டி: -சாணார்பட்டி மேட்டுக்கடை பிரம்மா குமாரிகள் ராஐயோக தியான ரிட்ரீட் சென்டரில் ஒரு நாள் ராஜயோக தியான நிகழ்ச்சி நடந்தது.
நேற்று காலை 8:00 மணியிலிருந்து மதியம் 4:00 மணி வரை நடந்த இந்நிகழ்ச்சியை பிரம்மா குமரிகள் துணை மண்டல பொறுப்பாளர் ராஜ யோகினி பிரம்மா குமாரி உமா, ராஜ யோகினி பிரம்மா குமாரி செந்தாமரை, மனநல மருத்துவர் டாக்டர் ராமன் ஜெய்சிங், இணை பேராசிரியர் தனலெட்சுமி ஸ்ரீநிவாசன், குடும்ப நலன்,கிராம சுகாதாரத் துறை, துணை இயக்குநர் (ஓய்வு) டாக்டர் ஜெயலட்சுமி ஜெய்சிங் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். 17 மாவட்டங்களிலிருந்து 800 பேர் பங்கேற்றனர்.