/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கேரளாவில் மழை:விலை குறைந்த காய்கறிகள் கேரளாவில் மழை:விலை குறைந்த காய்கறிகள்
கேரளாவில் மழை:விலை குறைந்த காய்கறிகள்
கேரளாவில் மழை:விலை குறைந்த காய்கறிகள்
கேரளாவில் மழை:விலை குறைந்த காய்கறிகள்
ADDED : ஜூன் 03, 2024 04:09 AM
ஒட்டன்சத்திரம்: கேரளாவில் தொடர்ந்து மழை பெய்வதால் அம்மாநில வியாபாரிகள் காய்கறிகளை கொள்முதல் செய்ய ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு வராததால் காய்கறிகள் விலை குறைந்தது.
ஒட்டன்சத்திரம் சுற்றியுள்ள கிராமப் பகுதிகள் வெளி மாவட்டங்கள்,மாநிலங்களில் விளையும் காய்கறிகள்இங்குள்ள மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
இங்கு கொள்முதல் செய்யப்படும் காய்கறிகளில் ஏறத்தாழ 70 சதவீதத்திற்கும் அதிகமாக கேரள வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். கேரளா வியாபாரிகள் கொள்முதல் செய்யவில்லை என்றால் இங்கு தேக்கம் ஏற்படுவதுடன் காய்கறிகள் விலையும் கணிசமாக குறைந்து விடும்.
இந்நிலையில் தற்போது கேரளாவில் தொடர் மழை பெய்ய தொடங்கியிருப்பதால் அங்கிருக்கும் வியாபாரிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வாங்க வரவில்லை. இதனால் காய்கறிகள் தேக்கம் அடைந்து குறைந்த விலைக்கு விற்பனையானது.
வெள்ளியன்று ஒரு கிலோ ரூ.30க்கு விற்ற வெண்டைக்காய்,நேற்று ரூ.18க்கு விற்றது. கிலோ ரூ.43 க்கு விற்ற முருங்கை ரூ.40க்கும் , ரூ. 8 க்கு விற்ற சுரைக்காய் ரூ.5க்கும்விற்றது.