/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பருத்திக்கு கட்டுப்படியான விலை தேவை பருத்திக்கு கட்டுப்படியான விலை தேவை
பருத்திக்கு கட்டுப்படியான விலை தேவை
பருத்திக்கு கட்டுப்படியான விலை தேவை
பருத்திக்கு கட்டுப்படியான விலை தேவை
ADDED : ஜூன் 03, 2024 04:07 AM
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டத்தில் உற்பத்தியாகும் பருத்திக்கு கட்டுபடியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. பருத்தி பயிர் வளர்ந்து பயன் கொடுக்க கிட்டத்தட்ட 150 நாட்களுக்கு மேல் ஆகிறது. பருத்தி விதையின் விலை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே போகிறது. அதே போல் களைக்கொல்லி மருந்து விலை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையால் கூலி உயர்வும் உயர்கிறது.
ஒரு கிலோ பருத்தி ரூ.82 வரை விற்பனை ஆகிறது. நடவு செய்து அதனை விற்பனை செய்வது வரை பருத்திக்கு ஆகும் செலவை கணக்கிட்டால் ஒரு கிலோவிற்கு ரூ.80க்கு மேல் விவசாயிகள் செலவு செய்ய வேண்டியுள்ளது.
ஆண்டுதோறும் பருத்தி விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு நிரந்தர விலை கிடைப்பது இல்லை. இதே நிலை தொடர்ந்தால் பருத்தி சாகுபடி பரப்பு குறைந்து விடும். எனவே பருத்தி விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
அப்பியம்பட்டி,விவசாயி,கந்தசாமி கூறியதாவது,பருத்திக்கு தொடர்ச்சியாக கட்டுபடியான விலை கிடைக்காமல் இருப்பதால் விவசாயிகள் பருத்தி பயிரிட்டு நஷ்டத்தை சந்திக்கின்றனர். இதன் காரணமாக ஆண்டுக்கு ஆண்டு பருத்தி பயிரிடும் பரப்பு குறைகிறது. இதே நிலை நீடித்தால் இப்பகுதியில் பருத்தி சாகுபடி செய்வது மறைந்துவிடும்.