/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வரத்து அதிகமானதால் விலை குறைந்த பூக்கள் வரத்து அதிகமானதால் விலை குறைந்த பூக்கள்
வரத்து அதிகமானதால் விலை குறைந்த பூக்கள்
வரத்து அதிகமானதால் விலை குறைந்த பூக்கள்
வரத்து அதிகமானதால் விலை குறைந்த பூக்கள்
ADDED : ஜூலை 29, 2024 06:26 AM
திண்டுக்கல் : ஆடி மாதம், விஷேச தினங்கள் இல்லாதது போன்ற காரணங்களால் திண்டுக்கல்லில் பூக்களின் விலை வெகுவாக குறைந்தது.
திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அண்ணா வணிக வளாக பூ மார்க்கெட் உள்ளது.
இங்கு நிலக்கோட்டை, செம்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, வெள்ளோடு, சித்தையன்கோட்டை, மயிலாப்பூர், செங்கட்டாம்பட்டி, போடிகாமன்வாடி, செம்பட்டி, வெள்ளோடு. மைலாப்பூர் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து பூக்கள் விளைவிக்கப்பட்டு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.இங்கிருந்து வியாபாரிகள் மொத்தமாகவும் சில்லரையாகவும் பூக்களை வாங்குகின்றனர்.
சில மாதங்களுக்கு முன் வைகாசி மாத முகூர்த்தம் உள்ளிட்ட பல்வேறு விஷேச நாட்கள் வந்ததால் பூக்களின் விலை உயர்ந்து மல்லிகை ரூ.1,400 வரை விற்பனையானது. அதேபோல் மற்ற பூக்களும் வழக்கத்தைவிட சற்று கூடுதல் விலையில் விற்பனையானது.
தற்போது மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகரித்தது. ஆடி மாதம் பிறந்ததையொட்டி சுப முகூர்த்த நிகழ்ச்சிகள் நடப்பது குறைந்தது.
கோயில்களுக்கு செல்லும் போது மட்டுமே பொதுமக்கள் பூக்களை வாங்குகின்றனர். இதன் காரணமாக வரத்து இருந்தும் அதன் தேவை குறைந்ததால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
சில வாரங்களுக்கு முன் ரூ.1,000 வரை விற்ற மல்லிகை நேற்று ரூ.250க்கு விற்பனையானது. ரூ.400-க்கு விற்ற முல்லை ரூ.130க்கு, ரூ.600-க்கு விற்ற கனகாம்பரம் ரூ.250-க்கு, ஜாதிப்பூ ரூ.200, பட்டன் ரோஜா ரூ.40-, சம்பங்கி ரூ.25 என விலை குறைந்தது.