Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பில் மாற்றம்

பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பில் மாற்றம்

பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பில் மாற்றம்

பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பில் மாற்றம்

ADDED : ஜூலை 29, 2024 06:26 AM


Google News
ஆத்துார்: பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பில் 4 அரசு பள்ளி முன்னாள் மாணவர்களுக்கு வாய்ப்பு அளித்து மொத்த எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது.

கல்வி உரிமைச் சட்டம் 6 முதல் 14 வயது குழந்தைகளுக்கு, இலவச கட்டாயக்கல்வியை அடிப்படை உரிமையாக்கி உள்ளது. அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்தல், ஆண்டுதோறும் வளர்ச்சித் திட்டம் தயாரித்து செயல்படுத்தல் போன்றவற்றுக்காக, அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்படுகிறது.

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுகட்டமைப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஆக.2ல் துவங்கி பள்ளி வாரியாக மறுகட்டமைப்பு தேர்தல் நடக்க உள்ளது. முந்தைய உறுப்பினர்கள் எண்ணிக்கையான 20ல் இருந்து, தற்போது கூடுதலாக 4 பேரை சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெண் தலைவர், துணைத்தலைவர், 12 உறுப்பினர்கள் என, பெற்றோர்களாக இருக்க வேண்டும்.

ஒரு முன்னாள் மாணவி உள்பட 2 உள்ளாட்சி பிரதிநிதிகள் தலா ஒரு சுய உதவி குழு உறுப்பினர், கல்வியாளர் இடம் பெறுவர். இதில் தலைமை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். கூடுதலான 4 பேர், குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களாகவும், இதில் 2 பேர் பெண்களாகவும் இருக்க வேண்டும் என, ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us