/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சின்னாளபட்டியில் தொழிலாளர் நல மருத்துவமனை அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி சின்னாளபட்டியில் தொழிலாளர் நல மருத்துவமனை அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி
சின்னாளபட்டியில் தொழிலாளர் நல மருத்துவமனை அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி
சின்னாளபட்டியில் தொழிலாளர் நல மருத்துவமனை அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி
சின்னாளபட்டியில் தொழிலாளர் நல மருத்துவமனை அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி
ADDED : ஜூன் 16, 2024 07:02 AM

சின்னாளபட்டி: ''சின்னாளபட்டி பகுதியில் 150 கோடி ரூபாயில் தொழிலாளர் நல மருத்துவமனை அமைக்கப்படும்'' என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.
சின்னாளபட்டியில் நடந்த நெசவு பூங்கா திறப்பு விழா கைத்தறித்துறை கமிஷனர் விவேகானந்தன் தலைமையில் நடந்தது. கைத்தறி,கதர் துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, காந்தி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், '' கைத்தறி நெசவாளர்களுக்கென அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட திட்டமிட்டு பணிகள் நடக்கிறது. விரைவில் 150 கோடி மதிப்பில் தொழிலாளர் நல மருத்துவமனை இப்பகுதியில் அமைக்கப்படும்'' என்றார்.
ஆர்.டி.ஓ., சக்திவேல், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, நடராஜன், மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய தலைவர் மகேஸ்வரி, கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் பங்கேற்றனர். தொப்பம்பட்டி :பழநி அருகே நரிக்கல்பட்டியில் தமிழ்நாடு அரசின் கைத்தறி துணி நுால் கதர் துறை சார்பாக 2 கோடி மதிப்பில் கைத்தறி பூங்கா திறந்து வைக்கப்பட்டது. இதை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார். அப்போது ரூ. 50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அரசு முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், துணிநுால் துறை கமிஷனர் வள்ளலார், கைத்தறித்துறை கமிஷனர் விவேகானந்தன், ஆர்.டி.ஓ., சரவணன் பங்கேற்றனர்.
அதிகாரிகளை கண்டித்த அமைச்சர்
விழாவில் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நெசவாளர்கள் முறையான கூலி கிடைப்பதாக கூறினர். அங்கிருந்த பெண் நெசவாளர்கள் பலர் இதற்கு எதிர்ப்பு குரல் எழுப்பினர். அதில் ஒருவரிடம் மைக் வழங்கப்பட்டது, ''நெசவுக்கான கூலி குறைந்தபட்சம் 100 ரூபாய் விட குறைத்து வழங்கப்படுவதாகவும், இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களில் புகார் தெரிவிப்போருக்கு நெசவு நுால், பாவு வழங்க மறுப்பதாக'' புகார் தெரிவித்தார். இதை கேட்ட அமைச்சர் காந்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கண்டித்தார்.