/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சேதமான தண்ணீர் தொட்டிகள்... பயன்பாடில்லா சுரங்கப்பாதை சிரமத்தின் பிடியில் திண்டுக்கல் 14வது வார்டு மக்கள் சேதமான தண்ணீர் தொட்டிகள்... பயன்பாடில்லா சுரங்கப்பாதை சிரமத்தின் பிடியில் திண்டுக்கல் 14வது வார்டு மக்கள்
சேதமான தண்ணீர் தொட்டிகள்... பயன்பாடில்லா சுரங்கப்பாதை சிரமத்தின் பிடியில் திண்டுக்கல் 14வது வார்டு மக்கள்
சேதமான தண்ணீர் தொட்டிகள்... பயன்பாடில்லா சுரங்கப்பாதை சிரமத்தின் பிடியில் திண்டுக்கல் 14வது வார்டு மக்கள்
சேதமான தண்ணீர் தொட்டிகள்... பயன்பாடில்லா சுரங்கப்பாதை சிரமத்தின் பிடியில் திண்டுக்கல் 14வது வார்டு மக்கள்

நாய்கள் தொல்லை
கிருஷ்ணன்,தனியார் ஊழியர்,வ.உ.சி.,நகர்: அண்ணாநகர் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவைகளை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதற்காக ஒருசில நாய்களை பிடித்து விட்டு அதையும் மீண்டும் அதே இடத்தில் விட்டு செல்கின்றனர். இதனால் எந்த பலனும் இல்லை. தொடரும் இப்பிரச்னையை தடுக்க அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.
ரோடுகளை சீரமையுங்க
பாலகிருஷ்ணன்,ஜி.டி,என்.ரோடு: எங்கு பார்த்தாலும் கொசுக்களின் கூடாரமாக சாக்கடையில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. துார்வாரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் மாதக்கணக்கில் கழிவுநீர் அப்படியே உள்ளது. வார்டில் உள்ள ரோடுகள் சேதமாகி குண்டும் குழியுமாக கிடக்கின்றன. மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.
தெரு விளக்குகள் இல்லை
அமல்,தனியார் ஊழியர்,திருச்சிரோடு: திருச்சி ரோடு ரயில்வே மேம்பாலத்தில் மேல் பகுதி,அடி பகுதிகளிலும் தெரு விளக்குகள் எரியாமல் இருக்கிறது. இரவில் இருள் சூழ்ந்திருக்கும் நிலை தொடர்கிறது. இதை பயன்படுத்தும் மர்ம நபர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். பல பகுதிகளில் மண் தரைகளாக தான் இருக்கிறது. ரோடுகள் போடுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அதிகாரிகள் தெருவிளக்குகளை முறைப்படுத்த வேண்டும்.
கவனம் செலுத்தலாமே
தனபாலன், கவுன்சிலர், (பா.ஜ.,): அண்ணாநகரில் உள்ள தண்ணீர் தொட்டி பல ஆண்டுகளாக சேதமாகி அப்படியே உள்ளது. நானும் எத்தனையோ முறை அதிகாரிகளிடம் புகாரளித்து விட்டேன். இருந்தபோதிலும் எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. இதன்மீது கவனம் செலுத்தவும் அவர்களுக்கு நேரமில்லை. டெலிபோன் காலனியில் மழைநீர் வடிகால்கள் முற்றிலும் சேதமடைந்து காணப்படுவதால் கழிவுநீர்,மழைநீர் ரோட்டில் செல்கிறது. இதனால் வடிகால்கள் முழுவதும் எலிகள் தொல்லைகள் அதிகரித்துள்ளது. சாக்கடைகளை துார்வாராமல் இருப்பதால் எல்லா பகுதிகளிலும் அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீர் ரோட்டில் செல்லும் அவலமும் நீடிக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் என் வார்டு மீது கவனம் செலுத்துவதில்லை என்றார்.